காஷ்மீரசைவமும் சைவசித்தாந்தமும் |
மெய்யியல் கற்கைப்புலம் மிக அகலமானதும் ஆழமானதும் ஆகும். ஏனைய துறைகளுள்ளும் புகுந்து நின்று கோலோச்சும் துறையிது. இந்திய - இந்து மெய்யியற் கற்கைப் புலத்தில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளமையைப் பேறெனக் கருதலாம். மரபுவழிக் கல்வியாளர்களிடமும் பல்கலைக்கழகத்தின் இந்துநாகரிக, மெய்யியற்துறைகளின் புலமைத்துவம் சார் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களிடமும் கற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதன் வழி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர். நா.ஞானகுமாரன் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 'சைவசித்தாந்த, காஷ்மீரசைவ மெய்யியலமைப்பு - ஓர் ஒப்பீட்டாய்வு' எனும் தலைப்பில் முதுதத்துவமாணி கற்கை நெறியை மேற்கொண்டு அதனை நிறைவு செய்தேன். அவ்வாய்வும் அதன் வழி பெற்ற அறிவையும் அடிப்படையாகக் கொண்டு 'காஷ்மீர சைவமும் சைவசித்தாந்தமும்' எனும் இந்நூல் வெளிவருகின்றது. |